ADVERTISEMENT

வேலையை முடித்த சிவகார்த்திகேயன்

06:59 PM Jun 05, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடலான ‘ஸீனா ஸீனா’ லிரிக் வீடியோ ஆகியவை முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணிகளை அண்மையில் படக்குழு தொடங்கியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், தனது போர்ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் 'அயலான்' படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT