udhyanaidhi about sivakarthikeyan maaveeran

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் 'மகாவீருடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் சிவகார்த்தியேனுக்கு அடிக்கடி வானிலிருந்து ஒரு குரல் கேட்பதாகவும் அதன்படி சிவகார்த்திகேயன் செயல்படுவதாகவும் ட்ரைலரை பார்க்கையில் உணரமுடிகிறது.

Advertisment

அந்த உருவம் தெரியாத குரலுக்கு தமிழில் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது நடிகர் மற்றும் அமைச்சரான உதயநிதி படம் குறித்து பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் பதிவிட்ட அவர், படம் சிறப்பாக இருப்பது போல தம்ஸ்-அப் எமோஜியை பகிர்ந்துள்ளார்.