/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94_26.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இதனிடையே 'டான்' படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் 'எஸ்.கே 21' படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சாய்பல்லவி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்திற்கு 'மாவீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் 'மகாவீருடு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)