ADVERTISEMENT

சிம்பு வெளியிட்ட ‘லவ்வர்’ போஸ்டர் - இணையத்தில் வைரல்

07:39 PM Nov 30, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த மணிகண்டன் குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயரிக்கின்றனர். கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். போஸ்டரில் மணிகண்டன் சோகத்தில் கையில் கட்டுடன் தீவிர யோசனையில் இருக்கிறார். காதலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ‘லவ்வர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT