வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில்சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில்சிம்பு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜாவை' ஆகிய இரண்டு படங்களையும்இயக்கியுள்ளார். தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலைஇயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக சிம்புவை வைத்து காதல் படம் ஒன்று இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்தஎந்தவிதஅதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.