Vendhu Thanindhathu Kaadu new update out now

Advertisment

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவு பெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படம் குறித்து தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மொஸார்ட் ஆஃப் தி மெட்ராஸ் ஏ.ஆர் ரஹ்மானை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் எளிமை கண்டு வியந்தேன். வெந்து தணிந்தது காடு படம் குறித்து நிறைய பேசினோம். ரசிகர்களுக்கான சிறப்பான இசை விருந்துவந்து கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.