ADVERTISEMENT

கமலை தொடர்ந்து சிம்புவுக்கும் கிடைத்த அங்கீகாரம்

10:43 AM Jul 02, 2022 | ArunPrakash


ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கியிருந்த நிலையில் தற்போது சிம்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT