
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிரபல மலையாள நடிகர் திலீப்க்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் பிரபல நடிகையை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.