ADVERTISEMENT

'இன்மை' என்பதின் அர்த்தம் என்ன தெரியுமா? - சித்தார்த் பதில்!

01:38 PM Jul 24, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

'இன்மை' என்ற சொல் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதைக் குறிக்கும். 'நவரசா' திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘இன்மை’ படத்தை இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் உருவாக்கியுள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, ‘நவரசா’வின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள ‘இன்மை’ படத்தில், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகராக வலம்வரும் நடிகர் சித்தார்த், தனது நடிப்பால் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துள்ளார். தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து ‘நவரசா’ திரைப்படத்தினை உருவாக்கியுள்ளனர். ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து நடிகர் சித்தார்த் பேசியுள்ளார். அதில்...

"மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை’ வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வைக் குறிக்கும் 'இன்மை' என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும். 'இன்மை' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். கரோனாவால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரதீந்திரன் பிரசாத், நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT