மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisment

sidharth

இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisment

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த மேட்ச் குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில், “ஜடேஜாவையும் தோனியையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் சூப்பராக விளையாடினீர்கள். இந்தத் தோல்வி வருத்தம் தருகிறது. இந்திய அணி போராடித் தோற்றது என்பதில் ஒரு ஆறுதல். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்துகள். இந்தப் போட்டியை காணும்போது மனம் வலித்தது” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment