கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம். இவர் கடைசியாக இயக்கிய பேரன்பு படம் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்றது. இதனையடுத்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

sidharth

இதனையடுத்து இயக்குனர் ராம் யாருடன் இணைந்து படம் இயக்க போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சித்தார்த்தை வைத்து தன்னுடைய ஐந்தாவது படத்தை இயக்க ராம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த்தும், ராமும் ஏற்கனவே நல்ல நெறுங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும்.

Advertisment

தற்போது நடிகர் சித்தார்த்-ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சசி இயக்கியிருக்கும் இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைபோல அருவம் என்ற பேய் படமும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கற்றது தமிழ் படம் வெளியான பின் அந்த படத்தை பார்த்த நடிகர் சித்தார்த், ராமிற்கு தானாக போன் செய்து எனக்கு எதாவது கதை பண்ணுங்க என்று கூறியதாக முன்பு ஒருமுறை இயக்குனர் ராம் கூறியிருந்தார். அதன்பின் நாங்கள் ஒன்றாக இணைந்து படம் நடிக்கவில்லை என்றாலும் நெறுங்கிய நண்பர்களாகிவிட்டோம் என்று ராம் கூறினார்.

Advertisment