ADVERTISEMENT

'பரந்தமனம் கொண்ட உதயநிதிக்கு நன்றி' - சீனுராமசாமி

01:19 PM Apr 27, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. முதல் முறையாக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மே 20 ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிவித்த நிலையில் சில காரணங்களால் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே ஜி.வி பிரகாஷை வைத்து 'இடிமுழக்கம்' படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனுராமசாமி. கலைமான் முபாரக் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'இடிமுழக்கம்' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படக்குழுவை ஃபோனில் அழைத்து பாராட்டியுள்ளார். இதற்கு சீனுராமசாமி நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைப்படம் வெளியாகி சினிமா நண்பர்கள் யாரும் இயக்குநரை அழைக்கவில்லையெனில் அப்படம் வெற்றி என்பது நானறிந்த சூத்திரம். ஆனால் இடிமுழக்கம் சிறப்புக்காட்சி பார்த்ததும் என்னை மட்டுமல்ல ஜி.வி பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரை அலைபேசியில் பாராட்டிய பரந்தமனம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT