seenu ramasamy, vijay sethupathi 'mamanithan' movie ott release announced

Advertisment

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'மாமனிதன்'. முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்கள் ஷங்கர், ரஜினிகாந்த், பாரதிராஜா மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் 'மாமனிதன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில் " மாமனிதன் திரைப்படத்தை ஆஹா இணையவழியில் விரைவில் சந்திக்கலாம். என்னை டிவிட்டரில் தொடர்ந்து வரும் நெஞ்சங்கள் ஒவ்வொருவரும் ஒரு முறை இப்படைப்பை காணவேண்டுமென விரும்புகிறேன்" என சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஓடிடி ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.