Skip to main content

'கலைஞர், எம்.ஜி.ஆர், சிவாஜி சிலைகளுக்கு சீனு ராமசாமி மரியாதை!'

 

'Seenuramasamy pays respct to MGR, Shivaji, kalaignar statues!'

 

சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியில் பல முறை மாற்றப்பட்டு தற்போது வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  

 

அந்த வகையில் சீனு ராமசாமி, நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், " மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி என் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன் " என சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.