ADVERTISEMENT

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த 'மாமனிதன்' படக்குழு

07:00 PM Jul 07, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது 'மாமனிதன்'. முதல் முறையாக இளையராஜாவும் - யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் ஷங்கர், ரஜினிகாந்த், பாரதிராஜா மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

'மாமனிதன்' படம் 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாகும் என நேற்று (06.07.2022) அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 15-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதோடு படத்தின் புதிய ட்ரைலரையும் பகிர்ந்துள்ளார் சீனுராமசாமி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT