/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1051.jpg)
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் 'மாமனிதன்'. ரிலீஸ் தேதியில் பலமுறை மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக இப்படம் நேற்று (24.06.2022) திரையரங்குகளில் வெளியானது. முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன.குறிப்பாக இப்படம் குடும்ப பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி மாமனிதன்படத்தில் வரும் ராதாகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு இவ்வளவுபெரிய வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அத்துடன் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)