ADVERTISEMENT

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

01:34 PM Nov 30, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் வீடு, சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு மர்ம நபர்களால், வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து, பெசன்ட் நகர் காவல்துறையும் , வெடிகுண்டு நிபுணர்களும் விக்ரமின் வீட்டில் சோதனை நடத்தி வந்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

காவல்துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பற்றி விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் தனுஷ் வீட்டிற்கும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனை முடிவில் அதுவும் புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT