/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_56.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும்முடித்துள்ளார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மகான் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காந்தியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு ரௌடியாக மாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர்பலரின் கவனத்தை பெற்றுவருகிறது.இப்படம் வரும் 10 ஆம்தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)