ADVERTISEMENT

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்தானம்!

10:57 AM Jan 21, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

காமெடியனாக இருந்து ஹீரோவாக முன்னேறிய நடிகர் சந்தனம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’ மற்றும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இன்று (21.01.2021) சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ள இப்படத்திற்கு 'சபாபதி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை விடுமுறையில் இப்படம் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT