ADVERTISEMENT

நோயின் தீவிரத்தன்மை - சினிமாவில் இருந்து விலகும் சமந்தா

12:07 PM Jul 05, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த ஆண்டு அக்டோபரில் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் இதற்கடுத்து அவர் கலந்து கொண்ட பேட்டிகளில் மிகவும் எமோஷனலாக பேசி கண்கலங்கினார். அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

அதையடுத்து இந்த நோயின் பாதிப்பில் இருந்து பூரண குணமடையும் வரை சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய சமந்தா கடந்த பிப்ரவரி முதல் மீண்டும் பழையபடி படம் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் கோவில் மற்றும் தேவாலயங்களில் உடல்நலம் முன்னேற வழிபாடு மேற்கொண்டார்.

அண்மையில் 'சிட்டாடெல்' வெப் தொடருக்காக செர்பியா சென்ற அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்தியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் முழுவதும் நிறைவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிட்டாடெல் தொடர் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் குஷி படத்தை முடித்து விட்டு நடிப்பிலிருந்து 1 வருடம் விலகி இருக்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எந்த படத்துக்கும் புதிதாக ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் இந்த 1 வருட இடைவெளியில் உடல்நலத்திற்காக கூடுதல் சிகிச்சை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT