/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/293_5.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ளநிலையில் படக்குழு வெளியீட்டுப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் காத்துவாக்குலரெண்டு காதல் படத்தை பார்த்து மகிழ்ச்சியில் நயன்தாரா சமந்தாவைகட்டியணைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவைதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். மேலும் சமந்தா பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)