Actress Pia Bajpiee relates to the pain of Samantha Myositis disease

தமிழில் ‘பொய் சொல்லப் போறோம்’, ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பியா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வந்த பியா 2018ஆம் ஆண்டிற்கு பிறகுஇவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்தியில் உருவாகும் 'லாஸ்ட்' படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="73d9ad06-4918-435a-8b26-ac37c245ec96" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_44.jpg" />

Advertisment

இந்நிலையில் சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பியா கூறுகையில், "சமந்தாவின் நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்காக நான் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். ஏனென்றால் அவர் தற்போது இருக்கும் நிலைமை என்னால் உணர முடிகிறது.

கடந்த 2016ம் ஆண்டுஒருநாள்காலில் வீக்கம் ஏற்பட்டுபின்பு அதன் வீக்கமும் தசை வலியும் அதிகமாக இருந்தது. அந்த வலியால் என்னால் உட்காரவோ நிற்கவோ முடியவில்லை. பிறகு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தேன். தசை அலர்ஜி நோய் என்று அப்போது தான் தெரிய வந்தது. பிறகு மீண்டும் அதனை உறுதிப்படுத்த டெல்லி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தேன். அங்கு அப்படி தசை லார்ஜி நோய் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அந்த சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டேன். அது பயங்கரமானவை. அதனால் சமந்தாவின் நிலைமை புரிகிறது. அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.