ADVERTISEMENT

"மிகவும் வேதனையடைகிறேன்" - சல்மான் கான், ஜி.வி. பிரகாஷ் இரங்கல்

12:26 PM Jun 03, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ள நிலையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சல்மான் கான், "இந்த விபத்தை கேட்டு மிகவும் வேதனை அடைகிறேன். மறைந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவன், இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பங்களை பாதுகாத்து வலிமை கொடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றி கேள்விப்பட்டு மனமுடைந்தேன். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்" எனப் பதிவிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT