நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து கவனத்தை பெற்று வரும் ஜி.வி பிரகாஷ் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக ப்ரொவோக் இதழ் (Provoke magazine) சிறந்த நடிகருக்கான விருதை ஜிவி - க்கு வழங்கியுள்ளது.

Advertisment

gv prakash

சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்டு உருவான சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.