ADVERTISEMENT

"உம்ம்மா... இதுதானே வேணும், வச்சுக்கோ" - கமல் - ரோபோ ஷங்கர் கலகல சந்திப்பு

01:26 PM Jun 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை பரிசாக அளித்தார். அத்துடன் விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.

இதனைத்தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலின் தீவிர ரசிகரான ரோபோ ஷங்கர் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கமலிடமிருந்து முத்தம் ஒன்று அன்பு பரிசாக வேண்டும் என்று ரோபோ ஷங்கர் கேட்டுள்ளார். இதையடுத்து கமல் உனக்கு முத்தம் தானே வேணும் இந்தா வச்சுக்கோ என்று கொடுத்துள்ளார். தனது ஆஸ்தான நாயகன் கமலிடமிருந்து முத்தம் கிடைத்துள்ளதால் ரோபோ ஷங்கர் மகிழ்ச்சியில் உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT