censor board cut 10 scenes Vikram film

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

சமீபத்தில் விக்ரம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு, படத்தில் சில காட்சிகளை கத்தரி போட்டு துக்கியுள்ளதாம். குறிப்பாகசென்சார் போர்ட் விக்ரம் படத்தில் 13 இடங்களில் கட் செய்துள்ளது. இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் வரும் முக்கிய காட்சிகளில் சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment