ADVERTISEMENT

"தொழிலாளர்கள்‌ பட்டினிச் சாவுகளை எதிர்நோக்க உள்ளார்கள்"- ஆர்.கே.செல்வமணி

11:49 AM May 04, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 40,000க்கும் மேலானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே3 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடியும் என்று எதிர்பார்க்கையில் சில தளர்வுகளுடன் மே17 ஆம் தேதிவரை லாக்டவுனை நீட்டித்துள்ளது இந்திய உள்துறை அமைச்சகம்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எழுதியுள்ள கடிதத்தில், "தற்போது ஊரடங்கு சட்டம்‌ போடப்பட்டு ஏறக்குறைய 50 நாட்களைத் தொட இருக்கிறோம்‌. கரோனா வைரஸ்‌ பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள்‌ ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ்த் திரைப்படத்துறையின்‌ அனைத்து வேலைகளையும்‌ நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50-வது நாட்களைக் கடக்க உள்ளோம்‌.

வெற்றிகரமான 100 நாள்‌, வெள்ளிவிழா, பொன்விழா எனத் திரைப்பட வெற்றிகளைச் சந்தோஷமாகக் கொண்டாடிய திரைப்படத்துறை இந்த வேலைமுடக்கப்பட்ட 50-வது நாள்‌ என்று அறிவிக்கக்கூடிய துர்ப்பாக்கியமான துன்பமான சூழ்நிலையில்‌ உள்ளோம்‌.

தமிழ்த்திரைப்படத் துறையினர்‌ நலவாரியம்‌ மூலம்‌ ரூ.1,000/- உம்‌, தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள்‌ மூலம்‌ பெறபட்ட நன்கொடை வழியாக 1,500 ரூபாய்க்கான உணவுப்பொருள்களும்‌, அமிதாப் பச்சன்‌ மூலம்‌ சோனி டிவி மற்றும்‌ கல்யாண்‌ ஜூவல்லரி வழங்கிய ரூ.1,500 மதிப்பிலான உணவுப்பொருள்களும்‌ ஏறக்குறைய ரூ.4,000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 50 நாள்‌ வேலை முடக்கத்தில்‌ பசிப்பிணியில்‌ இருந்து எங்கள்‌ தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்‌.

இனியும்‌ வேலை முடக்கம்‌ நீடிக்கப்பட்டால்‌ கரோனா வைரஸ்‌ பாதிப்பிலிருந்து தப்பித்த தொழிலாளர்கள்‌ பசிப்பிணியால்‌ பட்டினிச் சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில்‌ உள்ளார்கள்‌ என்பதை வருத்தத்துடன்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌.

தற்போது 17 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன்‌ கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போல்‌ திரைப்படத்துறைக்கும்‌, தொலைக்காட்சிகளுக்கும்‌ நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

குறைந்தபட்சம்‌ திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங்‌, ரீ -ரெக்கார்டிங்‌, டப்பிங்‌ போன்ற போஸ்ட்‌ புரொடக்‌ஷன்‌ பணிகளுக்கும்‌ தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும்‌ அனுமதி வழங்கினால்‌ சம்மேளனத்தின்‌ 40, 50 சதவீத தொழிலாளர்கள்‌ வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும்‌ என்பதையும்‌ அவர்கள்‌ பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்க முடியும்‌ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.


இந்தப் பணிகளை சமூக இடைவெளியுடன்‌ பணி செய்ய வைக்க இயலும்‌, என்பதால்‌ திரைப்படங்களுக்கு போஸ்ட்‌ புரொடக்‌ஷன்‌ பணிகளுக்கும்‌ மற்றும்‌ தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மத்திய, மாநில அரசுகள்‌ விதிக்கின்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும்‌ நிபந்தனைகளையும்‌ ஏற்று இந்தப் பணிகளைச் சமூக இடைவெளியுடன்‌ மருத்துவப் பாதுகாப்புகளுடன்‌ சுகாதாரமான முறையில்‌ இந்தப் பணிகளைச் செய்வோம்‌ என்று உறுதி அளிக்கின்றோம்‌" என்று தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT