/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agtsADVB.jpg)
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு அறிவித்தபடி மே 17ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவுக்கு நேற்று தமிழக அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தொலைக்காட்சி, திரைத்துறைபடப்பிடிப்புகள் முடக்கப்பட்டதால் சினிமாதொழிலாளர்கள்வாழ்வாதரத்தை இழந்துள்ளனர்.இந்தநிலைநீடித்தால் பட்டினிச் சாவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனசினிமாதொழிலாளர்கள் சார்பில் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக படப்பிடிப்பு அல்லாத ரீ-ரெக்கார்டிங்,டப்பிங் போன்ற பணிகளுக்காகவதுவிலக்கு அளிக்கவும், தளர்வுகள் அளிக்கவும் வேண்டும் என தமிழக அரசிற்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)