ADVERTISEMENT

ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த விஜய் படக்குழு!

04:15 PM Apr 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் வரும் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி, 'தளபதி 66 படத்தில்' விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ரஷ்மிக்கா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக மாறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT