Skip to main content

விஜய்க்காக ஒரு பாடல்; 'தளபதி 66' படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

vijay starring thalapathy66 film song update out now

 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இடத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முடித்து அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தில் 6 பாடல்கள் உள்ளதாகவும், அவற்றில் விஜய்யின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் குத்து பாடல் ஒன்று உள்ளதாகவும் நமக்கு நெருக்கமான சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்