ADVERTISEMENT

“பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்” - டான் படத்திற்கு ராமதாஸ் ரிவ்யூ!

10:16 AM Jun 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'டாக்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாகப் பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடினர். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்தேன், ‘பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்’ என்ற பாடத்தைச் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT