/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_117.jpg)
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில்,சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதியில் தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இந்த நிலையில், ‘டான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, முக்கிய பாடல் ஒன்றின் காட்சிகளைப் படமாக்க ‘டான்’ படக்குழுவினர் ஆக்ரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு வாரங்களில் அங்கு படமாக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்கிவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் முடிவில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)