ADVERTISEMENT

புதிய போஸ்டரை வெளியிட்ட 'ஆர்.ஆர்.ஆர்' டீம்!

12:59 PM Mar 27, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இப்படத்திற்கு தமிழில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தடைப்பட்டது. இதனையடுத்து, அக்டோபர் 13ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாகும் என அறிவித்த படக்குழு, படத்திற்கான இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இப்படத்தில் நடிகை ஆலியா பட் சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை ஆலியா பட் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் குறித்த பிரத்யேக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT