Skip to main content

'ஆர்.ஆர்.ஆர். படத்தால் அதிருப்தி ' - சமூக வலைதளத்தில் வெளிக்காட்டிய ஆலியா பட்  

 

alia bhatt

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், கடந்த 25ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் ஒருபுறம் கொண்டாடிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் நடிகை ஆலியா பட் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

ராம் சரணின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு பட ரிலீஸ் வரைக்கும் இருந்தது. ஆனால், ஆலியா பட் தொடர்பான காட்சிகள் சொற்ப நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதை ஆலியா பட்டே எதிர்பார்க்கவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த ஆலியா பட், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டார். மேலும், இயக்குநர் ராஜமௌலியை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளார். அதே நேரத்தில், நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை அவர் இன்னும் பின்தொடர்கிறார். இந்த விவகாரம் டோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்