ss rajamouli abou rrr 2

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது பெற்ற நிலையில் தற்போது உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது வாங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்துஅதற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் நடைபெறுவதாகவும்அதனை தனது தந்தை விஜயேந்திர பிரசாத் கவனித்து வருவதாகவும் முன்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்றதால் தற்போது இரண்டாம் பாகம் குறித்த பேச்சு பரவலாகப்பேசப்பட்டு வருகிறது.

Advertisment

இந்தநிலையில் இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசிய ராஜமௌலி, "கண்டிப்பாக இரண்டாம் பாகம் உருவாகும். உலக அளவில் தற்போது இந்த படம் கவனம் பெற்றுள்ளதால் அதன் பணிகளை வேகப்படுத்தவுள்ளேன். இசையமைப்பாளர் கீரவாணி ஒரு ஒன்லைன் சொன்னார். அது மிகவும் பிடித்துப் போனது. அதனால் அதையே எனது தந்தையிடம் சொல்லி எழுத சொல்ல முடிவெடுத்துள்ளோம். தற்போது, ​​அவர் கதையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஸ்கிரிப்ட் முடிந்ததும்அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்." என்றார்.