ADVERTISEMENT

மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டார்!

05:58 PM Jul 20, 2021 | santhosh

ADVERTISEMENT

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அண்ணாத்த’ படக்குழு, மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்படப்பிடிப்பை நிறைவுசெய்த ரஜினிகாந்த், தன்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா விரைந்தார். அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அங்கேயே தங்கி ஓய்வெடுத்துவந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், 'அண்ணாத்த' படத்தில் இன்னும் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய சில காட்சிகள் பாக்கி உள்ளதால் அதற்கான படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து இன்றும், நாளையும் நடந்து வருகிறது. இந்த இரண்டு நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்கிறார். அதோடு அவர் சம்பப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படுகின்றன. இதையடுத்து மற்ற சில நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சிகளைக் கொல்கத்தாவிலும், லக்னோவிலும் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே வரும் 25ஆம் தேதி இப்படத்துக்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசுகிறார். மேலும் கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட பிற தொழில் நுட்ப பணிகளும் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT