
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவரது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்துவந்தார். இதையடுத்து, சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது.
அதில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் கலந்துகொண்டு நடித்தனர். கரோனா இரண்டாம் அலைக்கு நடுவே ஒருமாதமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோருடைய காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கவுள்ளது. இதில் இதர நடிகர், நடிகைகள் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. இதோடு 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)