/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court_10.jpg)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'அண்ணாத்த' திரைப்படத்தைஇணையதளத்தில் சட்டவிரோதமாகவெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (29.10.2021) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 'அண்ணாத்த'திரைப்படத்தைசட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படத்தின் ட்ரைலர், யூடியூப் தளத்தில் 7.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)