ADVERTISEMENT

“என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு...” - ரஜினி உருக்கம்

10:30 AM Feb 09, 2024 | kavidhasan@nak…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து வெளியான இப்படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. வழக்கம் போல் ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேல தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். இந்த நிலையில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT