lal salaam enters in to 3rd week

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். லைகா தயாரித்தஇப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எங்க அப்பா சங்கி கிடையாது என பேசியது சர்ச்சையானது. பின்பு ரஜினியும் சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை என விளக்கமளித்திருந்தார். பின்பு ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 2ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முதல் நாள் திரையரங்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு கொடி அறிமுகம் செய்திருந்தனர்திருச்சிரஜினி ரசிகர்கள். இதனிடையே படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படம் 3ஆவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் படக்குழு ஒன்றிணைந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ரஜினி, ஏ.ஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.