rajini next with aishwarya rajinikanth titled as lal salaam

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புமுழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

மேலும் ரஜினி நடிக்கும் அடுத்தடுத்த படங்கள்குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி லைகா நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு ரஜினி ஒப்பந்தம் மேற்கொண்டார். இதில் ஒரு படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்று அறிவிப்பு வந்த நிலையில் தற்போது அதன் போஸ்டர்வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' என்ற தலைப்பில் இயக்கவுள்ளார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த்சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இசை பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார். இந்த போஸ்டரைப் பார்க்கையில் இது கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் கதை போலத்தெரிகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இரண்டு படத்தில் ஒரு படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைஅநேகமாக 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவார் எனத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.