ADVERTISEMENT

'ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ...' - பக்தி மோடில் ரஜினி

10:24 AM Jul 01, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதனிடையே இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவரைக் காண அங்கு பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முயன்றனர். பின்பு பாதுகாப்பாக காரில் ஏறிச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT