rajini portions completed in lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்து வந்தார். அப்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்நிலையில் ரஜினிகாந்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாகஐஸ்வர்யா ரஜினிகாந்த்தெரிவித்துள்ளார். மேலும் அதனை ரஜினியுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உங்களை வைத்து படம் எடுப்பது ஒரு அதிசயம், நீங்கள் ஒரு மேஜிக் அப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்ததாகத்தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.