ADVERTISEMENT

சூர்யாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராஜமௌலி....

12:55 PM Jun 28, 2019 | santhoshkumar

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாத இறுதியில் சூர்யா நடித்திருக்கும் ‘காப்பான்’ படம் வெளியாகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சூர்யாவை வைத்து மூன்றாவது முறையாக இயக்குகிறார் கே.வி. ஆனந்த்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிங்கம் 3 படத்தை தொடர்ந்து சூர்யா நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியிட இருக்கிறது படக்குழு.

தமிழில் காப்பான் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் தெலுங்கு வெர்ஸனுக்கு என்ன பெயர் வைக்க இருக்கிறார்கள் என்பதை நேற்று வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிடுவார் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தெலுங்கு திரையுலகின் முன்னாள் பெண் இயக்குநர் விஜய நிர்மலா மறைவையொட்டி இந்த அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலை பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் இந்த படத்துக்கு ‘பந்தோபஸ்த்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரை வெளியிட்டு ராஜமெளலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT