கடந்த மே 31ஆம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் வெளியானது. சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவனும் யுவனும் இணைந்து இப்படத்தில் ஒன்றாக பணி புரிந்தனர்.

Advertisment

ngk surya

நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

வெளியான நாள் முதல் இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுகிறது. இருந்தாலும் படம் நல்ல வசூல் சாதனையை புரிந்துள்ளது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், படம் இரண்டாம் வாரத்தை அடியெடுத்து வைத்துள்ளது.

Advertisment

இந்நிலையில், “ ‘என்.ஜி.கே.’ திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்டக் கதையம்சத்தையும், நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. #கத்துக்கறேன்தலைவரே” என ட்வீட் செய்துள்ளார் சூர்யா. இந்த ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.