Skip to main content

பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்-நடிகர் சூர்யா வேண்டுகோள்!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

எந்த ஊரிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காப்பான் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா,

 

Help schools instead of putting banner - Surya

 

வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் பயன் கிடைக்கும். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தால் அது நிச்சயம் வெற்றி பெறும். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் கதையை நான் எப்போதும் தவறு விடமாட்டேன். எந்த ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது. பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அதிமுக பேனரில் அரவிந்த்சாமி; பதறியடித்த நிர்வாகிகள் 

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Aravindsamy in AIADMK banner; Panicked executives

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நேற்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதில் சில இடங்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆதரவாளர்களும், எடப்பாடி அணியை சேர்ந்த ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். எம்.ஜி.ஆர் உடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு அதனை ஒட்டி வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த வரவேற்பு பேனர் ஒன்றில் எம்ஜிஆர் புகைப்படத்திற்குப் பதிலாக 'தலைவி' என்ற படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளானது. உடனடியாக பதறியடித்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் அரவிந்த்சாமி புகைப்படம் இருந்த இடத்தில் எம்ஜிஆரின் மற்றொரு அசல் படத்தை ஒட்டி விட்டு சென்றனர்.