ADVERTISEMENT

பிகில் படத்தில் நடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்?

10:56 AM Aug 02, 2019 | santhoshkumar

அட்லி விஜய்யும் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு யூ-ட்யூபில் வெளியிட்டது. தற்போது இப்பாடல் செம வைரலாகி வருகிறது.


அண்மையில் இப்படத்தில் நடித்து வந்த கதிர், தனது ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டார். இந்நிலையில் இப்படத்தில் சிங்கப்பெண்ணே பாடல் காட்சி ஒன்றில் ரஹ்மான் வருகிறார் என்று தகவல் கசிந்துள்ளது. விரைவில் இந்த தகவல் குறித்து படக்குழு உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT