ADVERTISEMENT

“அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்” -  ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

05:03 PM Apr 16, 2024 | kavidhasan@nak…

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்தில் நடிக்கவுள்ளார்.

ADVERTISEMENT

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே நிறைய மக்களுக்கு நிதி, கல்வி எனப் பல்வேறு உதவிகளை லாரன்ஸ் வழங்கி வருகிறார். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ராகவா லாரன்ஸின் ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், ‘மல்லர் கம்பம்’ சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், “என்னுடைய படங்களில் அதிகபட்சம் மாற்றுத் திறனாளி பசங்களை ஆடவைக்க முயற்சி செய்வேன். அவுங்களுக்கு நடனத்தை விட்டால் வேறு எதுவும் தெரியாது. வாழ்வாதாரமே நடனத்தில் தான் அடங்கியிருக்கு. ஆனால் கை கால்கள் இல்லை என்றாலும் கூட அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கே சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருக்கும் போது பசங்கள கூப்பிட்டு 5 நிமிஷம் ஆடசொல்லி பார்ப்பேன். இவுங்களே இவ்ளோ சாதிக்குறாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆனா எப்பிடி-னு ரீசார்ச் பண்ணிப்பேன்.

ADVERTISEMENT

சமீப காலமாக பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்காம இருந்தாங்க. நான் நடிக்கிற எல்லா படத்திலும் மாற்றுத் திறனாளி பசங்களை பயன்படுத்தலாம் எனச் சொல்லி தயாரிப்பாளரிடம் கேட்பேன். எல்லா இடத்திலும் அவுங்களையே ஆட வைச்சா ரிப்பீட் ஆகிற மாதிரி இருக்கு மாஸ்டர்னு சொல்வாங்க. எத்தனையோ தடவை நயன்தாரா, த்ரிஷா ஆடியதையெல்லாம் பார்க்கிறோம்ல சார், இந்தப் பசங்களையும் பார்ப்போம் எனச் சொல்வேன். இதற்கு ஒரு சிலர் ஒத்துப்பாங்க, ஒரு சிலர் வேண்டாம்னு சொல்லிவிடுவாங்க. வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமல் எவ்ளோ விஷயங்கள் நடக்குது. அது தற்கொலை வரை போகிறது. ஆனால் இந்தப் பசங்களைப் பார்த்து தற்கொலை செய்யும் எண்ணம் வரவங்க கத்துக்க வேண்டும்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT