First Look Poster Release of Raghava Lawrence Movie Rudhran

தமிழ்சினிமாவில்நடனஇயக்குநராகபிரபலமடைந்த ராகவாலாரன்ஸ், 'முனி' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 'முனி' படத்தின்வெற்றியைத்தொடர்ந்து 'காஞ்சனா', 'காஞ்சனா 2', 'காஞ்சனா 3' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.ஹாரர்காமெடிஜானரில்வெளியான இப்படங்கள் ரசிகர்களிடம் நல்லவரவேற்புபெற்றதைத்தொடர்ந்து, ராகவாலாரன்ஸின்பேய் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.அதனைத்தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'ருத்ரன்' மற்றும் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கிறார்.

Advertisment

'ருத்ரன்', இப்படத்தை 'ஃபைவ்ஸ்டார்க்ரியேக்ஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கிவருகிறார். தயாரிப்பாளராக இருந்த கதிரேசன் இப்படத்தின் மூலம்இயக்குநராகஅறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமாபாக்யராஜ்உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'ருத்ரன்' படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்தற்போது வெளியாகியுள்ளது.இப்போஸ்டரில்ராகவாலாரன்ஸ், வில்லன்களை அடித்து விட்டு முகத்தில் ரத்த காயத்துடன் கெத்தாக நிற்பது போல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும்எனப்படக்குழுஅதிகாரப்பூர்வமாகத்தெரிவித்துள்ளது.