ADVERTISEMENT

அன்னையர் தினத்திற்காக பாடல் வெளியிடும் ராகவா லாரன்ஸ்...

03:35 PM May 10, 2019 | santhoshkumar

லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.


காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.


தற்போது ராகவா லாரன்ஸ் இந்தியில் காஞ்சனா ரீமேக்கின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் வருகிற மே 12ஆம் தேதி உலக அன்னையர் தினத்தையொட்டி ராகவா லாரன்ஸ் பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறார். கொஞ்ச நாட்களில் அந்த பாடலுக்கு அவரே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிடவும் உள்ளார். குடும்பத்தால் கைவிடப்பட்ட தாய்மார்களுக்காக தாய் என்றொரு அமைப்பை ஆரம்பிக்க இருக்கிறார் அதற்கான ஒரு முன்னோட்டமாக இப்பாடல் இருக்கும் என்று தெரிகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT